வடகொரியாவுக்கு 70க்கும் மேற்பட்ட விலங்குகளை பரிசாக வழங்கிய ரஷ்யா!
வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு ரஷ்யா ஆப்பிரிக்க சிங்கம் மற்றும் இரண்டு பழுப்பு நிறக் கரடிகளை உள்ளடக்கிய 70க்கும் மேற்பட்ட விலங்குகளை பரிசாக வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வு, மொஸ்கோவும் பியாங்யாங்கும் இடையிலான உறவின் சமீபத்திய முன்னேற்றமாக அமைந்துள்ளது.
ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமையிலான ரஷ்ய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் அலெக்சாண்டர் கோஸ்லோவ், புதன்கிழமை (20) தனது அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலில், இந்த விலங்குகள் சரக்கு விமானத்தில் வடகொரிய தலைநகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.