Sunday, Jan 19, 2025

ஜனாதிபதி அநுரவின் விசேட உரை

By jettamil

ஜனாதிபதி அநுரவின் விசேட உரை

இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை என்றும், இனவாதம், மதவாதம், மற்றும் கோசங்களை கட்டியெழுப்ப எவருக்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார்.

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றிய போது, அவர் இதனை குறிப்பிட்டார்.

“எம்மீதும், அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி,” எனக் கூறிய அவர், “இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதனால், தனியொரு கட்சி நாட்டை ஆள வேண்டும் என்பது ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.”

அதற்கேற்ப, அனைத்து பிரஜைகளின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். மக்களுக்கு பொறுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது, மற்றும் நான் ஜனாதிபதி என்ற வகையில் மக்களின் பொறுப்பை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

“நாங்கள் ஒரே நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளோம்,” என தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்தார். “இனவாத அரசியலுக்கு இடமில்லை. எந்த மதவாதத்திற்கும் இடமில்லை.”

மேலும், “எந்தவொரு இனவாதம் அல்லது மதவாதம் மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இடமளிக்கப்படாது” என அவர் உறுதியளித்தார்.

“அனைவரும் மக்கள் பிரதிநிதிகள் என்றால், நாடாளுமன்றத்தில் கூறப்படும் அனைத்தும் மக்களால் அறிந்து கொள்ள வேண்டும். வலுவான அரச சேவையின்றி நாடு முன்னேற முடியாது.”

மக்களின் நலனுக்காக செயல்படும் ஒரு திறமையான அரச சேவை மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், “அதற்காக அரச ஊழியர்களிடமிருந்து பலமான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்” என அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு பிரஜையும், அவரவர் மதம், கலாசாரம் மற்றும் மொழியின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. “அரசியல் மாற்றங்கள் இருக்கலாம், ஆனால் சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது” எனச் சொன்னார்.

எனவே, “அச்சம் மற்றும் சந்தேகம் இல்லாத சுதந்திர ஜனநாயக அரசை உருவாக்குவது நமது பொறுப்பாகும். அதை நாங்கள் உருவாக்குவோம்” என அவர் உறுதியளித்தார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு