ஐஸ் போதைப்பொருள் வழக்கில் தேடப்பட்ட சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரணடையத் தயார்.
மித்தெனிய பகுதியில் ஐஸ் போதைப்பொருளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட ரசாயன மூலப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், தேடப்பட்டு வந்த சம்பத் மனம்பேரி நீதிமன்றில் சரணடைய முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் அவர் சரணடையத் தயாராக இருப்பதாக அவரது சட்டத்தரணி நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர் எனச் சந்தேகிக்கப்படும் கெஹல்பத்தர பத்மே என்பவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கொள்கலன்களை மித்தெனியவில் மறைத்து வைத்ததாகச் சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, அவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் ஒரு காரையும் எம்பிலிப்பிட்டி பொலிஸார் அண்மையில் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





