ஆழ் கடலுக்குள் இருக்கும் இதுவரை வெளி உலகுக்குத் தெரியாத மர்மங்களை வெளிக்கொணர மனிதர்களுடன் கடலுக்கு அடியில் 6000 மீட்டர் ஆழத்துக்குச் சென்று ஆய்வு நடத்தும் ஆழ்கடல் ஆய்வுக்கலமான சமுத்ரயான் திட்டத்தை முதல் முறையாக இந்தியா மேற்கொள்ளவிருக்கிறது.
தாதுப் பொருள்கள் வங்கக் கடலில் இருக்கிறதா என ஆய்வு செய்ய ‘சமுத்திரயான்’ திட்டத்தை செயல்படுத்த தேசிய கடல் தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.
சந்திரயான்-3, ஆதித்யா எல்1 ஆகிய விண்கலங்களை இஸ்ரோ சமீபத்தில் வெற்றிகரமாக ஏவி சாதனை படைத்தது.
அந்த வகையில், ஆழ்கடல் திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசியக் கடல் தொழில்நுட்பக் கழகம் ‘சமுத்திரயான்’ திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதற்கு மத்சியா 6000 என்று பெயரிடப்பட்டுள்ளது.
முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுவரும் இதில் 3 மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
ஆழ்கடலுக்கு மனிதர்களை அனுப்பும் முதல் திட்டம் இந்த சமுத்திரயான். இத் திட்டத்தின் கீழ், 3 பேரை 6,000 அடி ஆழம் வரை கடலுக்குள் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது