Saturday, Feb 8, 2025

பாடசாலை மாணவன் மாவா போதைப் பொருளுடன் கைது!

By Jet Tamil

யாழ்ப்பாணம் தீவகப் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் மாவா போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

தீவக குடியிருப்பு பகுதி ஒன்றில் வசிக்கும் குறித்த மாணவன்  கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றிய நிலையில்  மாவா போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் குறித்த மாணவனை கைது செய்த ஊர்காவற்துறைப் பொலிசார் நீதிமன்றத்தில் முற்படுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு