Sunday, Jan 19, 2025

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு மல்லாவியில் கையெழுத்து போராட்டம்

By jettamil

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு மல்லாவியில் கையெழுத்து போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டம், மல்லாவி நகரில் இன்று (02) கையெழுத்துப் போராட்டம் நடைபெற்றது.

போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி குறித்த கையெழுத்து சேகரிப்பு நடைபெற்றது.

பயங்கரவாத தடையுரிமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போராளிகளையும், புதிய அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

jaf

இந்த கையெழுத்துப் போராட்டத்தில் மத தலைவர்கள், பொதுமக்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆர்வலர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொண்டு தங்களது ஆதரவை பதிவு செய்தனர்.

மிகவும் விரைவில் சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள், மகஜரான வடிவில், ஜனாதிபதி முன்னிலையில் கையளிக்கப்படவுள்ளன.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு