யாழ். நகர்ப் பகுதியில் வன்முறை கும்பல்: நால்வர் அதிரடியாக கைது!
யாழ்ப்பாணம் நகரில் இரவு நேரத்தில் முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி வன்முறையில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் நால்வர் காவல்துறையினரால் இன்றையதினம் (02.01.2025) கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியாலை மற்றும் பொம்மை வெளி பகுதிகளைச் சேர்ந்த இந்த நால்வரும், யாழ்ப்பாணம் காவல்துறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு முச்சக்கர வண்டிகளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.