தொழிலாளர் அமைச்சு அறிமுகப்படுத்திய புதிய வாட்ஸ் அப் எண்
மக்களின் தேவைகளுக்கு விரைவான பதிலளிக்க தொழிலாளர் அமைச்சு புதிய வாட்ஸ் அப் எண்னை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வாட்ஸ் அப் எண் 0707 22 78 77 ஆகும், இதன் மூலம் சேவைகள் மேலும் திறம்பட வழங்கப்படுவதாக தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் அமைச்சகம் மற்றும் தொழிலாளர் திணைக்களம் மக்கள் எதிர்பார்க்கும் நிவாரணங்கள் மற்றும் தலையீடுகளை விரைவாக வழங்க முயற்சிக்கின்றன.
தனியார் மற்றும் அரை அரசு ஊழியர்களின் சேவை பிரச்சினைகள் தொடர்பாக விரைவான பதில்களை வழங்க இந்த புதிய வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது.