கனடாவின் டொரண்டோவில் பனிப்பொழிவு தொடர்பான எச்சரிக்கை!
கனடிய சுற்றாடல் திணைக்களம், டொரண்டோவில் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை, டொரண்டோ நகரின் பெரும்பாலான பகுதிகளைப் பற்றி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், சில பகுதிகளில் போக்குவரத்து சிரமங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 5 முதல் 10 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு காணப்படும் என்று கணிக்கப்படுகிறது.
வீதிகள் சறுக்கக்கூடிய நிலையில் இருப்பதால், சாரதிகள் மிகுந்த கவனத்துடன் பயணம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகன சாரதிகள், வீதியில் தெளிவாக பார்வையிடுவதில் சிரமம் ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.