Sunday, Jan 19, 2025

இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கடவுச்சீட்டு தொடர்பான சில தகவல்கள்.

By jettamil

இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கடவுச்சீட்டு தொடர்பான சில தகவல்கள்.

இலங்கையில் 21.10.2024 இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இராஜதந்திர கடவுச்சீட்டு, உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்கள் மூன்று வெவ்வேறு வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் சாதாரண கடவுச்சீட்டு கருமைநிறம் புலப்படக்கூடிய வகையில் கருநீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன.

4-5 ம் பக்கத்தில் தலதாமாளிகை
6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில்
8 ம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம்
9 ம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல்
10-11 ம் பக்கத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம்
12-13 ம் பக்கத்தில் அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை
14-15 ம் பக்கத்தில் பதுளை ஒன்பது வில் பாலம்
16-17 ம் பக்கத்தில் மட்டக்களப்பு வாவி
18-19 ம் பக்கத்தில் கொழும்பு தாமரைக் கோபுரம்
20-21 ம் பக்கத்தில் காலி கோட்டை
22-23 ம் பக்கத்தில் கம்பகா இறப்பர் தோட்டம்
24-25 ம் பக்கத்தில் ஹம்பாந்தோட்டை உப்பளம்
26-27 ம் பக்கத்தில் களுத்துறை STILT மீனவர்கள்
28 ம் பக்கத்தில் பின்னவல யானைகள் சரணாலயம்
29 ம் பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை
30 ம் பக்கத்தில் குருநாகல் யாப்பகூவா குன்றுகள்
31 ம் பக்கத்தில் தலைமன்னார் படகுத்துறை
32-33 ம் பக்கத்தில் சிகிரியா குன்று
34 ம் பக்கத்தில் மாத்தறை வெளிச்சவீடு
35 ம் பக்கத்தில் யால தேசிய பூங்கா
36 ம் பக்கத்தில் முல்லைத்தீவு கொக்கிலாய் பறவைகள் சரணாலயம்
37 ம் பக்கத்தில் நுவரெலியா தேயிலை தோட்டம்
38-39 ம் பக்கத்தில் பொலநறுவை பழமை நகரம்
40-41 ம் பக்கத்தில் புத்தளம் டொல்பின் காட்சிக்காணல்
42-43 ம் பக்கத்தில் சிவனொளிபாதமலை
44 ம் பக்கத்தில் திருகோணமலை புறாத்தீவு
45 ம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை
என்பன அச்சிடப்பட்டுள்ளன.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு