Welcome to Jettamil

வல்வெட்டித்துறை வல்வை சிவன் கோயிலில், சக்கரவாக பட்சியின் சூரபத்மன் வதைபடலம்

Share

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை வல்வை சிவன் கோயிலில், சக்கரவாக பட்சியின் சூரபத்மன் வதைபடலம் நேற்று பக்திபூர்வமாக  இடம்பெற்றன.

கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய, சூரபத்மன் முருகனுடனான போரில், இந்திரஜால தேரானது முருகனால் பறிக்கப்பட்டதன் பின் தனது வில்லும் உடைக்கப்பட்ட கோபத்தில்,  சூரபத்மன் தன் தவத்தால் சிவபெருமானிடம் வாங்கிய சூலாயுத்தை கொண்டு பெரிய சிங்கம் ஒன்றிலே ஏறி முருகனுடனான போரை செய்யும் போது முருகன் தான் கொண்டுள்ள வச்ராயுதத்தால் சூரனின் சூலாயுதத்தை பறித்து அம்புகளால் சிங்கத்தினையும் கொல்கிறார்.

 இவற்றால் மிகவும் கோபமுற்ற சூரபத்மன் மிக கொடிய தோற்றம் கொண்ட சக்கரவாகபட்சி வடிவம் கொண்டு பறந்து திரிந்து சண்டை இடுகிறார். வல்வை சிவன் கோயிலில் கிட்டத்தட்ட 80ஆண்டுகளுக்கு முன்பதாகவே பெரிய செயற்கையான  சக்கரவாகபட்சி ஒன்று செய்யப்பட்டுள்ளதோடு சூரசம்ஹார நாளில் அவ்வப்போது போர் புரியவும் விடப்பட்டுள்ளது. கந்தபுராணம் சூரபத்மன் வதைபடலத்தில் (பாடல் 350 -392) இது காணப்படுகின்றது.

இந்த உற்சவத்தினை ஆலய பிரதம குரு மனோகர குருக்கள் நடாத்திவைத்தார்.

இதனை காணுவதற்காக பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் புடைசூழ்ந்தனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை