இலங்கையில் தொடரும் மசாலா பொருட்கள் மற்றும் தேங்காய் எண்ணெய் மோசடி
பயன்படுத்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு சந்தைக்கு அனுப்பும் மோசடி தொடர்ந்துவருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டின் மீது சங்கத்தின் பொதுச் செயலாளர் சமீரா முத்துக்குடா கூறியதாவது, ‘‘பண்டிகைக் காலத்தில் சுகாதார தரங்கள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் சோதனைகளை ஆரம்பித்துள்ளனர்’’ என்றார்.
இவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில், மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை, மஞ்சள் போன்ற கலவையான மசாலா பொருட்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதற்கு முறைப்பாடுகள் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், 5000 க்கும் மேற்பட்ட கடைகள் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டதாகவும், 450 கடைகள் நுகர்வுக்குப் பொருத்தமற்ற உணவுகளை விற்பனை செய்ததைப்பற்றிய குற்றச்சாட்டுகளுக்காக வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் சமீரா முத்துக்குடா தெரிவித்தார்.