இலங்கை அரசாங்கம் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக சீனாவிடம் இருந்து மற்றொரு கடனைப் பெறுவதற்கான பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
சீனாவிடம் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள கடன் தொகை இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்றும், அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்று நம்புவதாகவும் அஜித் நிவாட் மேலும் கூறியுள்ளார்.
சீனாவுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதால் ஏற்படும் விளைவுகளைத் தணிக்க, சீனாவிடமிருந்து புதிய கடன் பெறவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்காக 1 பில்லியன் டொலரைப் பெறுவது குறித்து இந்தியாவுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்றும், மத்திய வங்கி ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.