Welcome to Jettamil

இஸ்ரேலில் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

Share

இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, தூதரகத்தின் ஊடாக தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தொடங்கி 13 நாட்கள் கடந்துவிட்டன.

தற்போது இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர், எகிப்துக்கும் காஸா பகுதிக்கும் இடையிலான ஒரேயொரு விநியோகப் பாதையான ரஃபா எல்லையைத் திறக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்படி, மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் பாரவூர்திகள் அந்த வீதியூடாக பயணிக்க முடியும்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் தொடங்கியதை அடுத்து, ரஃபா எல்லையை இஸ்ரேல் மூடியது.

இதற்கிடையில், பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேலுக்கு இரண்டு நாள் பயணத்தை தொடங்க உள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதியை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை