Welcome to Jettamil

அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு

Share

அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக ராகம வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த வியாழன் (25) அதிகாலை கட்டுநாயக்க அதிவேகப் பாதையில் கார் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும், சாரதி பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்த விபத்து அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாகவும், இராஜாங்க அமைச்சர் பயணித்த SUV கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு கொள்கலன் ட்ரக்கின் பின்பகுதியில் மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை