விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்! வைரல் வீடியோ
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஆறு மாதங்களுக்கும் மேலாக மிளிரும் விண்வெளியில் பணியாற்றி வரும் சுனிதா வில்லியம்ஸ், தனது குழுவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கொண்டாடிய காணொளியை நாசா வெளியிட்டுள்ளது.
சுனிதா மற்றும் அவரது குழுவினர், வரும் பெப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ளது. எனினும், அவர்கள் பூமிக்கு திரும்பும் திட்டம் ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுனிதா மற்றும் அவரது குழுவினர், பூமியில் இருக்கும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்து, விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை பதிவு செய்துள்ளனர். இந்த காணொளி தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.