இணையவழி நிதி மோசடிகள் அதிகரிப்பு!
கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருடப் பிறப்பு பண்டிகைகளின் போது, இணையவழி நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) எச்சரித்துள்ளது.
இந்த காலங்களில், பரிசுகளை வென்றதாக கூறி பொது மக்கள் மெய்நிகர் அழைப்புகளைப் பெறுவது, அவர்களை நிதி ரீதியாக ஏமாற்றுவதற்கான வழியாகும் என SLCERT இன் முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தகவல் அளித்துள்ளார்.
மேலும், சில மோசடிகள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடப்பதாகவும், பல முறைப்பாடுகள் இந்த தொடர்பில் வந்துள்ளதையும் அவர் கூறினார்.
இந்நிலையில், பொதுமக்கள் இதுபோன்ற இணையவழி நிதி மோசடிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.