Welcome to Jettamil

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!

Share

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலம் யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!

தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் தலைமைக் காரியாலம் இன்றையதினம் (03) யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

யாழ். மாநகர ஆளுகைக்குள் உள்ள இலக்கம் 58, பொன் இராமனநாதன் வீதியில் குறித்த அலுவலகம் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

சட்டத்தரணி மணிவண்ணன், எஸ்.சிற்பரன், பார்த்தீபன் உள்ளிட்ட கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களுடன் மன்னார், வவுனியா மவட்டங்களின் அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

மங்கல விளக்கை ஏற்றி நிகழ்வை ஆரம்பமான குறித்த நிகழ்வு, உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி விக்னேஸ்வரனால் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் மணிவண்ணன் அவர்களால் கட்சியின் கொடி ஏற்றி வைக்கபட்டதை அடுத்து கட்சியின் தலைமைக் காரியாலயத்தின் பெயர்ப் பலகை திரைநீக்கமும் செய்துவைக்கப்பட்டது.

நிகழ்வுக்கு வருகைதந்தவர்கள் வரவேற்கப்படதை தொடர்ந்து கட்சியின் செயலாளர் நாயகம் விக்னேஸ்வரன் அவர்களால் தலைமைச் செயலகம் உத்தியோகபூர்வமாக நாடாவெட்டி திறந்துவைக்கப்பட்டது.

இந்நிழ்வின் இறுதியில் கட்சியின் மகளிர் அணியினரது ஏற்பட்டில் பாடசாலை மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை