Welcome to Jettamil

மன்னாரில் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களது உடல்கள் உறவினர்களிடம் கையளிப்பு

Share

மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இரண்டு குடும்பஸ்தர்களின் சடலங்களும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கிரிகைகள் இன்றைய தினம் சனிக்கிழமை (26) இடம்பெற உள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா என்ற (வயது – 42) 3 பிள்ளைகளின் தந்தை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது-56) 5 பிள்ளைகளின் தந்தை ஆகிய இரு குடும்பஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும் வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிலில் வயலுக்குச் சென்ற போது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதேவேளை கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சி குளத்தைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா என்ற குடும்பஸ்தரும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

மேலும் ஜேசுதாசன் அருந்தவராஜாவின் வயலில் வேலை செய்யச் சென்ற சன்னார் கிராமத்தை சேர்ந்த கணபதி காளிமுத்து என்பவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற இரு சகோதரர்களின் இரட்டை கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நோக்குடன் இச்சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

-குறித்த இரட்டை கொலை தொடர்பாக அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை