Welcome to Jettamil

வல்வெட்டித்துறையில் கணவன், மனைவி உயிரிழந்த தீவிபத்துக்கான காரணம் வெளியானது

Share

வல்வெட்டித்துறையில் கணவனும், மனைவியும் நேற்று அதிகாலையில், இடம்பெற்ற தீவிபத்தில் உயிரிழந்தமைக்கு, மின் ஒழுக்கே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் நேற்று அதிகாலை சடலங்களாக மீட்கப்பட்டனர்.

வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த 30 வயதுடைய சரவணபவான் ரஞ்சித்குமார் அவரது மனைவி  26 வயதுடைய கிருசாந்தினி ஆகிய இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டனர்.

தம்பதியினர் உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர், அயலவர்களின் உதவியுடன் அறையை உடைத்து உள்நுழைந்த போது, இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணையில் அறையில் மின் ஒழுக்கு ஏற்பட்டமை மற்றும் பெட்ரோல் பரவியமை கண்டறியப்பட்டுள்ளது.

மின் ஒழுக்கை அடுத்து, படுக்கை அறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெட்ரோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை