பிலிப்பைன்ஸில் ராய் சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 375ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தச் சூறாவளியினால், பிலிப்பைன்சை சேர்ந்த, 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும், 56 பேரைக் காணவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
3 இலட்சத்து 80ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணுவம், கடற்படை, தீயணைப்புத் துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் தேடுதல், மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சூறாவளியினால், கரையோரப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கூறப்படுகிறது.