அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்று ஒமக்ரோன் பரவல் குறித்து நாட்டு மக்களுக்கு முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோரால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் குறித்து அவர் தனது உரையில், எச்சரிக்கை விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் தொற்றுப் பரவல் சூழலில் சமூகங்களுக்கு உதவ, பைடன் புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் குளிர்காலத் திட்டங்களுக்கு அப்பால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேலதிக நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையிலேயே ஜோ பைடன் இன்று உரையாற்றவுள்ளார்.
இவர் தனது உரையில் பண்டிகைக்கால கட்டுப்பாடுகள் பலவற்றை அறிவிக்கலாம் என்றும் ஊகங்கள் வெளியிடப்படுகின்றன.