ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள பக்டிகா மாகாணத்தில் நேற்று காலை ஏற்பட்ட பூகம்பத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மேலும் ஆயிரத்து 600 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
பெருமளவு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கி உள்ளதால், பலியானோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் வெளிநாட்டினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி விட்டதால், மீட்பு பணியில் சிக்கல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
அனைத்து தொண்டு நிறுவனங்களையும் உதவி செய்யும்படி தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பூகம்பம், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் மற்றும் பஞ்சாப் மாகாணத்திலும் உணரப்பட்டதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.