Welcome to Jettamil

இன்று கொழும்புக்கு வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்

Share

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இன்று இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று இன்று விசேட விமானத்தில் இலங்கைக்கு பயணம்  மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான உயர்மட்ட குழு, இலங்கைக்கு மேலும் உதவிகளை வழங்குவது தொடர்பாக, ஆராய்வதற்காக இன்று கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

விசேட விமானம் ஒன்றில் கொழும்பு வரும் இந்த உயர்மட்டக் குழு,  மூன்று மணி நேரம் மட்டுமே இங்கு தங்கியிருக்கும் என்றும், இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய வெளிவிவகார செயலாளர்,   வினய் மோகன் குவாத்ராவும் இன்று கொழும்பு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளிவிவகார செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட வினய் மோகன் குவாத்ரா, இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை