Welcome to Jettamil

உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்றவர்களது விபரங்கள் வெளியானது

Share

2021ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவலின் படி, மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவனான தமிழ்வாணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

பதுளை, கெங்கொல்ல மகா வித்தியாலய மாணவனான இசார லக்மால் ஹீன்கெந்த கலைப்பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இம்முறை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் மீள தோற்ற வேண்டுமெனில் எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் இணைய முறைமையில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பரீட்சை பெறுபேறுகளுக்கான மீள் திருத்தத்திற்கு விண்ணப்பிக்கும் முறைமை மற்றும் காலம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தமுறை வெளியாகியுள்ள பெறுபேறுகளுக்கு அமைய, 1 இலட்சத்து 71 ஆயிரத்து 497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிப்பெறுள்ளனர்.

உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட்சத்து 72 ஆயிரத்து 682 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்த நிலையில், 49 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை