திருத்தப்பட்ட இந்திய துறைமுகங்கள் மசோதாவின் சில பிரிவுகள் மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளதால், அவற்றை நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கோரியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், இந்திய துறைமுகங்கள் மசோதா 2022-ல் திருத்தப்பட்ட சில பிரிவுகள் சிறு துறைமுகங்களின் எதிர்கால வளர்ச்சியை தடுப்பதாக உள்ளது.
கடலோர மாநிலங்களின் உரிமைகளையும் பாதிப்பதாக உள்ளது.
எனவே அத்தகைய பிரிவுகளை அகற்ற வேண்டும்.” என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.