Welcome to Jettamil

மாவீரர் நினைவேந்தல் தடையுத்தரவு தொடர்பான வழக்கு நீதவானால் திங்களன்றுக்கு திகதியிடப்பட்டது

Share

மாவீரர் நினைவேந்தல் தடையுத்தரவு தொடர்பான வழக்கு நீதவானால் திங்களன்றுக்கு திகதியிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்றையதினம் பொலிசாரால் கொண்டு செல்லப்பட்டது.

ஒலிபெருக்கி பயன்பாடு மற்றும் துயிலுமில்ல கட்டுமானம் உள்ளிட்ட சில விடயங்களை உள்ளடக்கி தடை உத்தரவினை பெறும் வகையில் பொலிசாரால் தடை உத்தரவு பெறும் வகையில் மன்றில் முறைப்பாடு செய்யப்பட்டது.

குறித்த முறைப்பாட்டினை பார்வையிட்ட நீதவான், குறித்த வழக்கினை திங்களன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கனகபுரம், முழங்காவில், தேராவில் துயிலுமில்லங்கள் மற்றும் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை துயிலுமில்லங்களில் இவ்வாறு தடை உத்தரவு பெறுவதற்கான விண்ணம் மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கினை பார்வையிட்ட நீதவான் திங்களன்று விசாரணைக்காக திகதியிட்டார். குறித்த வழக்கு தொடர்பில் எதிர் தரப்பு சார்பில் சட்டத்தரணிகள் மன்றில் ஆயராகியிருந்தனர் .

குறித்த வழக்கிற்காக இன்றைய தினம் முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள் என சிலரும் மன்றிற்கு சென்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை