Welcome to Jettamil

கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

Share

கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை!

வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகமானது தமது பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை முற்றாக அழித்தொழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக இன்று காலை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு குடிப்பதற்காக பலர் கூடியிருந்த காட்டுப்பகுதி திடீரென சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் முற்றுகையிடப்பட்டது.

இந்த முற்றுகையின் போது கசிப்பு பரலை கைவிட்டு அங்கு கூடியிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், கசிப்புடன் கசிப்பு பரல் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் கைப்பற்றப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை சென்மேரிஸ் விளையாட்டுக் கழக தலைவரும் பருத்தித்துறை பிரதேசசபை உறுப்பினருமான பி.அலஸ்ரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. கழகத்தின் முன்மாதிரியான குறித்த செயற்பாட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை