Friday, Feb 7, 2025

நல்லூரில் இருந்து வவுனியா வரையான வாகனப் பேரணியானது நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பம்

By kajee

நல்லூரில் இருந்து வவுனியா வரையான வாகனப் பேரணியானது நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பம்

வெடுக்குநாறி மலையில் மஹாசிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுவிக்ககோரி, நல்லூரில் இருந்து வவுனியா வரையான வாகனப் பேரணியானது நல்லூர் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து இன்று காலை 7.45 மணியளவில் ஆரம்பமாகியது.

இப் பேரணியானது காலை 10 மணியளவில் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தை அடைந்து, வெடுக்குநாறி மலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி மாபெரும் கண்ட போராட்டம் இடம்பெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடக பேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்தார்.

இப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட ஆசிரிய சங்க தலைவர், உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள், கைது செய்யப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் கலந்துகொண்டனர்

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு