Welcome to Jettamil

நல்லூரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பேட்டரியை திருடியவர் கைது!

Share

நல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் பற்றரியை திருடியவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தசஷ்டி விரத தினத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறும் நிலையில் நல்லூர் ஆலயத்திற்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்ற நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர் ஒருவரின் முச்சக்கர வண்டியில் இருந்து பற்றியை திருடியவர் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளதோடு திருடிய முச்சக்கர வண்டியின் பற்றரியினையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் காரைநகர் பகுதி சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நூதனமான திருட்டுகளில் ஈடுபட்டு வருபவர் எனவும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை