இலங்கை – அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (29) காலை 10.00 மணிக்கு காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தொடங்குகிறது.
பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில், அவுஸ்திரேலியா அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார்.
இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியை 3-1 என்ற கணக்கில் வென்ற அவுஸ்திரேலியா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் இடம்பிடித்து விட்டது. இதன் பின்னர், ஜூன் 11-16 வரை லோர்ட்ஸ் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மோத உள்ளது.
இலங்கை 2023-2025 WTC சுழற்சியில் 11 போட்டிகளில் 6 தோல்விகள் அடைந்துள்ளது, இதனால் WTC இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கான வாய்ப்புகள் கைவிட்டுள்ளது. எனவே, இன்று தொடங்கும் டெஸ்ட் தொடரின் அணியை தனஞ்சய டிசில்வா வழி நடத்துவார்.
இவர்களுக்கிடையிலான 33 டெஸ்ட் போட்டிகளில் அவுஸ்திரேலியா 20 வெற்றிகளை பெற்றுள்ளது. இலங்கை 5 வெற்றிகளை மட்டுமே அடைந்துள்ளதுடன், 8 போட்டிகள் சமனையில் முடிவடைந்துள்ளன.
இன்றைய போட்டி நடைபெறும் காலி பகுதியில் மழைக்கான வாய்ப்புகளுடன் ஓரளவு மேகமூட்டம் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதனால், ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆட்டத்தின் ஆரம்பத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சில உதவிகளை வழங்கும்.