ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் முன்னெடுக்கப்படவுள்ள போரட்டம்
ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (25) முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று மாலை 4 மணிக்குப் போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தென்னிலங்கை ஊடக அமைப்புக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்தப் போராட்டதில் அனைத்துத் தரப்பினரையும் அணிதிரளுமாறு யாழ். ஊடக அமையம் கோரிக்கை விடுத்துள்ளது.