ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் மாணவி ஒருவரின் கை நகத்தினை அகற்றும் அளவிற்கு ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் ஒன்று யாழில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாரு ஆசிரியரினால் தாக்கப்பட்டதாக யாழ் போதனா வைத்தியசாலை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
அந்தப் பாடசாலையின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் மாணவி மீது ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் மாணவியின் கை நகம் சிதைவடைந்துள்ளது.
இதனால் மாணவியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அந்த மாணவியின் நகம் சத்திர சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு நிகழ்ந்த குற்றச்செயலை மறைப்பதற்காக பாடசாலை நிர்வாகம் முயற்சித்ததாகவும், மாணவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சம்பவம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த சம்பவம் தொடர்பில் உரிய முறையில் விசாரணை செய்வதற்கான குழு அமைக்கப்படும் என அவர் கூறியதாக தெரியவந்துள்ளது.