ஏறாவூர் பொது நூலகத்தில் இடம் பெற்ற மூன்று முக்கிய நிகழ்வுகள்
ஏறாவூர் நகரசபை நிருவாகத்தின் கீழ் இயங்கும் நூலகங்கள் இணைந்து நடாத்திய மூன்று முக்கிய நிகழ்வுகள் இன்று ஏறாவூர் பொது நூலக மண்டபத்தில் இடம் பெற்றது.
பொது நூலக பொறுப்பாளர் எம்.எஸ்.ஜௌபர் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், நிருவாக உத்தியோகத்தர் நபீறா றசீன், சன சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ. ஹாறூன், நூலக விடய உத்தியோகத்தர்கள் ஏ.ஆர் சஞ்சீதா, உட்பட நூலக பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
ஏ.சீ.எம் நிபாத் நூலகங்கள் சார்பாக பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.
அத்துடன் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நூலக உத்தியோகத்தர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகம் கட்டுதல் தொடர்பான பயிற்சி விப்பும், புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வும் நகரசபை நூலகங்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.