Welcome to Jettamil

இலங்கையில் இருந்து மேலும் மூவர் அகதிகளாக தமிழகம் சென்றனர்

Share

இலங்கையில் இருந்து மேலும் மூவர், அகதிகளாக தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.

மன்னார் – பேசாலை பகுதியில் இருந்து படகு மூலம் ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் என 3 பேர்,  நேற்றுமுன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் கடற்கரையில் தரை இறங்கினர்.

இதுகுறித்து நேற்று அதிகாலை தகவல் கிடைத்ததும் கடலோர காவல்துறையினர் மற்றும் க்யூ பிரிவு காவல்துறையினர் விரைந்து சென்று மூன்று பேரையும் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் இவர்கள் தெமட்டகொட பகுதியை சேர்ந்த 51 வயதுடைய ஜெசிந்தா மேரி, இவரது மகன் 10 வயதுடைய  பிரவீன் சஞ்சய்  மற்றும், மன்னார் கொக்கு படையான் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய அனிஸ்டன் என தெரியவந்துள்ளது.

பொருளாதார நெருக்கடிகளை அடுத்து இவர்கள் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை