பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் நேருக்கு நேர் மோதிய டிப்பர், உழவியந்திரம்: 3 பேர் காயம்
பரந்தன் – முல்லைத்தீவு A35 வீதியில் உள்ள முரசுமோட்டைப் பகுதியில், டிப்பர் வாகனமும் உழவியந்திரமும் (டிராக்டர்) நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றது.
பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி அரி கல் ஏற்றிய நிலையில் சென்று கொண்டிருந்த உழவியந்திரமும், எதிர்த் திசையில் வந்த டிப்பர் வாகனமும் மோதியதாலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மோதிய வேகத்தில், உழவியந்திரத்துடன் மோதிய டிப்பர் வாகனம் வீதியில் குறுக்காகத் தடம் புரண்டுள்ளது.
உயிரிழப்பு விவரம்
உழவியந்திரத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பயணித்திருந்த நிலையில், மூவரும் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிப்பர் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளானார்.

இந்த விபத்து தொடர்பாக கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






