Welcome to Jettamil

கூகுளின் 25ஆவது பிறந்த தினம் இன்று

Share

உலகின் மிக பிரபலமான தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று (27) தனது 25ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறது.

அதற்காக கூகுள் நிறுவனம், இந்த நாளை குறிக்க தனது முகப்பு பக்கத்தில் ஒரு டூடுலையும் உருவாக்கி உள்ளது.

ஆனால் கூகுள் நிறுவனமானது 1998இல் செப்டம்பர் 4இல் நிறுவப்பட்டது.

நிறுவப்பட்ட முதல் 7 வருடங்கள் மேற்குறிப்பிட்ட நாளில் பிறந்த நாள் கொண்டாடப்பட்டாலும் அதன் பிறகு செப்டம்பர் 27 ஆம் திகதியே கூகுளின் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது.

செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் என்ற இரு நண்பர்கள் இணைந்து உருவாக்கியதே கூகிள் என்ற தேடு பொறி நிறுவனம்.

கூகுளின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆவார்.

தற்போதைய இணைய உலகில் தன்னிகரற்ற தேடுபொறியாக கூகுள் ஜொலித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை