Welcome to Jettamil

சுனாமி ஏற்பட்டு இன்றுடன் 18 வருடங்கள் நிறைவு – பல பகுதிகளில் நினைவேந்தல்கள்  

Share

சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவு கூறும் வகையில் இன்று காலை 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை அறிவித்துள்ளது.

இலங்கையில் ஆழிப்பேரலை ஏற்பட்டு நாளையுடன் 18 வருடங்கள் நிறைவு பெறுகிறது. அனர்த்தத்தினால் நாட்டின் 14 கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 35,000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 5,000 பேர் காணாமல் போயுள்ளனர். மற்றும் 34 பிரதேச செயலகங்களில் உள்ள 235,145 குடும்பங்களைச் சேர்ந்த 502,456 பேர் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், “தேசிய துக்க தினம்” நாளை கொண்டாடப்படுகிறது. மாவட்ட மட்டத்தில் இதற்காக பல்வேறு நினைவு கூறும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை