இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இன்று (05) மாலை அல்லது இரவு நேரத்தில், சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களுடன் கூடிய களுத்துறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மற்ற பகுதிகளில் மழையற்ற காலநிலை நிலவக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைக்க, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது அவசியம் என வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.