Sunday, Jan 19, 2025

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது!

By Jet Tamil

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது!

பழங்கால பொருட்களை பெறுவதற்காக சட்டவிரோதமாக அகழ்வு மேற்கொண்ட 7 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹியோவிட்ட – அட்டுலுகம, மீவலகந்த பிரதேசத்தில் நடந்த அகழ்வு நடவடிக்கையை குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பு மேற்கொண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25 முதல் 56 வயதுக்கிடையில் உள்ள சீதுவ மற்றும் தெஹியோவிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்த இடத்தில் அகழ்வு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பூஜை பொருட்கள் மற்றும் பல உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தெஹியோவிட்ட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு