தாய்லாந்தில் சுற்றுலா பேரூந்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு!
தாய்லாந்தின் தெற்கு பகுதியில், யாலா மாகாணத்திற்கு செல்லும் சுற்றுலா பேரூந்தானது விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாங்காங் அருகே இருந்து யாலா மாகாணத்திற்கு சென்றுகொண்டிருந்த குழுவின் பேரூந்து, சூரத் தானி மாகாணத்தில் உள்ள சாலையின் வளைவைக் கடக்கும் போது மரத்துடன் மோதியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்ப்பதற்காக போலீசார் விரைந்து செயல்பட்டனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.