உணவு பொதிகளின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்
தற்போது அரிசி விலைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு, எதிர்காலத்தில் உணவு பொதிகளின் விலைகளின் அதிகரிப்பை தூண்டும் என அநுராதபுரம் மாவட்ட சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று அநுராதபுரத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், சங்கத்தின் தலைவர் இந்திக்க அருண குமார கூறியதாவது, “அரிசி நெருக்கடி காரணமாக, பல உணவகங்கள் மூடப்படுவதுடன், உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், அரசாங்கம் இறக்குமதி செய்த 5,200 மெற்றிக் தொன் அரிசியின் முதல் தொகுதி மற்றும் 580 மெற்றிக் தொன் கொண்ட இரண்டாவது தொகுதி நேற்று நாட்டை வந்தடைந்துள்ளன. கொழும்பில் நடந்த செய்தியாளர் மாநாட்டில், அரச வர்த்தக சட்ட ரீதியான கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ, “விநியோக நடவடிக்கைகள் இன்று நிறைவடையும்” என அறிவித்தார்.