எந்த காலத்திலும் இல்லாத வகையில் இன்று மெனிங் சந்தைக்கு அதிகளவான மரக்கறிகள் வந்துள்ளதாகவும் ஆனாலும் அவை உயர்வாகவே காணப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நுவரெலியா வாரச்சந்தையில் மலையக மற்றும் கீழ்நாட்டு மரக்கறிகள் அனைத்தும் 450 ரூபாவிற்கு மேல் உள்ளதால் மரக்கறிகளை கொள்வனவு செய்வதில் குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற சூழ்நிலையில் காய்கறி வியாபாரத்தை கைவிட்டு வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வாரச்சந்தை வியாபாரிகள் கூறுகின்றனர்.