மீண்டும் வழமைக்கு திரும்பிய A-09 வீதியின் போக்குவரத்து! – யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் சேவை ஆரம்பம்!
நாட்டில் தொடர்ந்து நிலவி வந்த சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகப் பல நாட்களாகத் தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணம் மற்றும் கண்டி இடையேயான A-09 வீதியின் போக்குவரத்து தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாக வீதி மேம்பாட்டு ஆணையம் இன்று திங்கட்கிழமை (டிசம்பர் 1, 2025) தெரிவித்துள்ளது.
A-09 வீதியில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கண்டி இடையேயான பிரதான வீதி வழக்கம் போல் இயங்கினாலும், வடக்கு மாகாணத்தின் ஏனைய பல முக்கிய வீதிகளின் போக்குவரத்து இன்னமும் தடைபட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வடக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய தடைபட்ட வீதிகளையும் விரைவாகச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.





