வட்டுக்கோட்டையில் தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பு!
தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பானது இன்றையதினம் வட்டுக்கோட்டையில் உள்ள மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தில் நடைபெற்றது.
வடமாகாண கல்வி அமைச்சும் தொழில்துறை அமைச்சும் இணைந்து இந்த மூன்றுநாள் பயிற்சிநெறியை நடைமுறைப்படுத்தியது.
இந்த பயிற்சியின் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச செயலர் கவிதா உதயகுமார் அவர்கள் கலந்துகொண்டதுடன், வடமாகாண கல்வி அமைச்சின் உபசெயலாளர், தொழில் துறை அமைச்சின் அதிகாரி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மூளாய் கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இச்செயலமர்வில் சுமார் 50பேர் பயனாளிகள் பயனடைகின்றனர்.