நாட்டில் நேற்று கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை திடீரென இரண்டு மடங்காகியுள்ளமை சுகாதார அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கடந்த பல நாட்களாக, 300இற்கும் சற்று அதிகமான கோவிட் தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டு வந்தனர்.
நேற்று முன்தினமும், 365 தொற்றாளர்களே இனங்காணப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று 629 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு மடங்காகியிருப்பது தொற்றுப் பரவல் அதிகரிப்பதைக் காட்டுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்மஸ், புத்தாண்டு பண்டிகைக் காலங்களில்,மக்களின் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என்று சுகாதார அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தனர்.
அத்துடன் இலங்கையில் ஒமக்ரோன் தொற்றும் பரவி வருவதாகவும் அவர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.