Welcome to Jettamil

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்!

Share

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்!

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்றையதினம் 10 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு சங்கானை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சங்கானை பிரதேச செயலர் பிரிவில் வசிக்கின்ற, பொருளாதார ரீதியாக நலிவுற்ற 10 மாணவர்களுக்கே இவ்வாறு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களும் மாலைகள் மற்றும் பொன்னாடைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ். இந்திய துணைத்தூவர் கலந்து சிறப்பித்தார். மேலும், இந்த நிகழ்வில் சர்வ மதகுருக்கள், யாழ் இந்திய துணைத்தூதரக அதிகாரி நாகராஜன், சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார், கிராம சேவகர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை