இன்றையதினம் தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று மாலை 6.30 மணியளவில் கொல்லங்கலட்டி பகுதியில் இருந்து கீரிமலை சிவன்கோவில் வரை இந்த தீப்பந்த போராட்ட பேரணி இடம்பெற்றது.
மின்சார விலை அதிகரிப்புக்கு எதிராகவும், எரிபொருள் அதிகரிப்புக்கு எதிராகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.