Welcome to Jettamil

இலங்கையில் மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தல்

Share

மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டியது அவசியம் என மின்சார சபையின் தலைவர் நலிந்த இலங்ககோன் வலியுறுத்தியுள்ளார்.

மின்சக்தி அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இது குறித்து தௌிவுபடுத்தியுள்ளார்.

மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியும் போதுமான டீசலும் இல்லை எனவும் பாரிய நிதி தேவைப்படுவதாகவும் நலிந்த இலங்ககோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவரை காலமும் மின்சார சபை நட்டத்துடனேயே இயங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், மக்களை அச்சமூட்டி மின் கட்டணத்தை அதிகரிக்க  அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

அரசியல்வாதிகளின் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு மக்கள் பலியாகக் கூடாது என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை