வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சோபகிருது வருட பிறப்பு பூசைகள் மிக சிறப்பாக இடம்பெற்றன.
ஆலய பிரதம குரு கணபதீஸ்வரக் குருக்கள் தலமையில் சிவாச்சாரியார்களால் சிறப்பு புது வருட பூசைகள் நடாத்தப்பட்டுள்ளன.
இன்று காலை 11: 30 மணியளவில் ஆரம்பமான பூசை பொங்கல் மற்றும் அபிசேக பூசைகளுடன் இடம் பெற்றன.
இதில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் அடியார்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.